மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

ஒற்றை வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்!

ஒற்றை வாக்கு பெற்ற பாஜக வேட்பாளர்!

இன்று காலை 8 மணி முதல் உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பல்வேறு பகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

பாஜகவும் ஒரு சில வார்டுகளில் வெற்றியைத் தக்க வைத்து வரும் நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், 11ஆவது வார்டில் மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 162 வாக்குகள் பதிவாகின.

திமுக சார்பில் போட்டியிட்ட உமா சங்கர் 84 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் செல்வம், 35 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் நாகமையன் 42 வாக்குகளும் பெற்றனர். இவர்களுடன் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரன் ஒரு வாக்கை மட்டுமே பெற்றுள்ளார். அதுவும் அவர் தனக்குத் தானே செலுத்திய வாக்காகும்.

இதன்மூலம் அவருக்குத் தனது குடும்ப உறுப்பினர்கள், சொந்த கட்சியினர், நண்பர்கள் என யாருமே வாக்களிக்காதது தெரியவந்துள்ளது.

கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின் போது கோவை, குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டில் போட்டியிட்ட பாஜகவைச் சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு ஒரே ஒரு வாக்கு மட்டுமே விழுந்திருந்தது. அப்போது ஒற்றை வாக்கு பாஜக என விமர்சனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 22 பிப் 2022