தோல்வி: மயக்கமடைந்த திமுக வேட்பாளர்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தேர்தலில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, அதிர்ச்சியில் திமுக வேட்பாளர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை முதல் வாக்கு எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பாலமுருகன் 678 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா 118 வாக்குகள் குறைவாக பெற்று, அதாவது 560 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார் என்று அறிவிக்கப்பட்டது.
தோல்வி செய்தியை கேட்டதும், திமுக வேட்பாளர் கார்த்திக் ராஜா வாக்கு எண்ணிக்கை வளாகத்திலேயே மயக்கம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காவல்துறையினர் அவரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-வினிதா