மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 22 பிப் 2022

வாக்கு எண்ணிக்கை: இணையத்திலும் பார்க்கலாம்!

வாக்கு எண்ணிக்கை: இணையத்திலும் பார்க்கலாம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (பிப்ரவரி 22) எண்ணப்படுகின்றன. இந்தச் சூழலில் இணையதள வாயிலாகத் தேர்தல் முடிவுகளைத் தெரிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்குக் கடந்த 20ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,746 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவின் முடிவில் 60.70 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

இதையடுத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி எனத் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்ட ஸ்ட்ராங்க் ரூம் எனப்படும் பாதுகாப்பு அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச்செல்லப்பட்டு வார்டு வாரியாக வைக்கப்பட்டன.

இந்தச் சூழலில் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஏழு வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. நேற்று பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்பட உள்ளன.

வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை மற்றும் அதற்கு வெளியே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில் இன்று தமிழகம் முழுவதும் 279 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்காகத் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

தடையின்றி மின்சாரம், கணினி வசதி ஊழியர்களுக்குக் குடிநீர் மற்றும் உணவு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணும் மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

இந்தச் சூழலில் தேர்தல் முடிவுகளை இணையதள முகவரி வாயிலாகத் தெரிந்துகொள்ளத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்கு எண்ணும் மையங்களில் அவ்வப்போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் https://tnsec.tn.nic.in/ தேர்தல் முடிவுகள் குறித்த விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

செவ்வாய் 22 பிப் 2022