மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி எச்சரிக்கை!

வாக்கு எண்ணிக்கை: எடப்பாடி எச்சரிக்கை!

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதை ஒட்டி மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் என்றால்... தமிழகம் முழுவதும் திமுகவினரும் அதிமுகவினரும் வாக்கு எண்ணிக்கையின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள் பற்றி ஆங்காங்கே ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது...

"நாளை நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக வெற்றி பெற்றால், அதனைத் தோல்வி என்று அறிவிக்குமாறு தேர்தல் அலுவலர்களுக்கு ஆளுங்கட்சி தரப்பில் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதைச் செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு சென்றுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் திமுக அமைச்சர்கள் தேர்தல் பொறுப்பு ஏற்றுள்ளனர். அந்தந்த அமைச்சர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் திமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது.

அனைத்து வார்டுகளும் எண்ணி முடித்த பிறகு முடிவு அறிவிக்கத் திட்டமிட்டுள்ளனர். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

நாங்கள் ஏற்கனவே தொடர்ந்த வழக்கில் தபால் வாக்குகளை முதலில் எண்ணுமாறும் ஒவ்வொரு வார்டு எண்ணி முடித்தபின் முடிவுகளை அறிவித்து வெற்றி சான்றிதழை கொடுக்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எண்ணிப் பார்த்து நடுநிலையோடு வாக்கு எண்ணும் அலுவலர்களும், தேர்தல் ஆணையமும் செயல்பட வேண்டும்.

தவறு செய்தால், அவர்களுக்கு சட்டரீதியாக நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்றுத் தருவோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "எப்போது செந்தில் பாலாஜி கோவைக்குப் பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டாரோ அப்போது முதல், அங்கு பிரச்சினை இருந்துகொண்டே இருக்கிறது. அங்கு குண்டர்களை இறக்கி சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ளார்” என்று தெரிவித்தார்.

கவி வேந்தன்

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

திங்கள் 21 பிப் 2022