மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 21 பிப் 2022

மாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து!

மாஜி அமைச்சர் மீதான வழக்கு ரத்து!

தேர்தல் பறக்கும் படை அதிகாரியை மிரட்டியதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மீதான வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

2021 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அப்போதைய செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவின் வாகனத்தை சோதனை செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரில் வந்தவர்கள் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்பட்டது.

இதுகுறித்து நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து அளித்த புகாரின் பேரில் கடம்பூர் ராஜு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கடம்பூர் ராஜு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வாகன சோதனையின் போது, முழு ஒத்துழைப்பு அளித்தேன். அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுக்கவில்லை. காவல்துறையினர் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் ” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை இன்று (பிப்ரவரி 21) விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், கடம்பூர் ராஜுவின் வாதத்தை ஏற்று அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

திங்கள் 21 பிப் 2022