மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

எனக்காக கெடுபிடி வேண்டாம்: ஆளுனர் தமிழிசை

எனக்காக கெடுபிடி வேண்டாம்: ஆளுனர் தமிழிசை

தெலங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று பிப்ரவரி 19 காலையிலேயே சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி வாக்கு செலுத்தினார்.

ஆளுநர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தில் பழங்குடி இனமக்கள் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்ல வேண்டும் என்ற நிலையிலும்... காலை சீக்கிரமே சாலிகிராமத்தில் உள்ள தனது வாக்கு அமைந்திருக்கும் வாக்குச்சாவடிக்கு வந்தார்.

அப்போது அவருக்காக காவல் துறையினர் சில பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வாக்களித்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,

"நான் தெலுங்கானா ஆளுநர் ஆக இருந்தாலும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் ஆக இருந்தாலும் தமிழ்நாட்டில் எனது பொறுப்பை நிறைவேற்றும் வகையில் வாக்கு செலுத்த வந்திருக்கிறேன். ஒவ்வொருவரும் தங்களது வாக்கை செலுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் என்பது நமக்கு நெருக்கமான நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். எனவே அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்றவரிடம்...

" பொதுவாகவே நீங்கள் மீடியாக்களுடன் நட்புறவு பாராட்டுபவர். ஆனால் இன்று நீங்கள் வாக்களிக்க வரும்போது ஊடகத்தினரிடம் கெடுபிடி காட்டப்பட்டதே?" என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த தமிழிசை, "வாக்கு சாவடிக்கு என சில சட்டதிட்டங்கள் இருக்கின்றன. அவற்றை வலிமைப்படுத்தி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். கவர்னருக்காக என பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏதும் இல்லை. இருந்தும் எனக்காக எதுவும் கெடுபிடி செய்திருந்தால் அது வேண்டாம் என நான் அதிகாரிகளை கேட்டுக் கொள்கிறேன்"என்று பதில் அளித்தார் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 19 பிப் 2022