மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 19 பிப் 2022

21 மாநகராட்சியிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: முதல்வர்!

21 மாநகராட்சியிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்: முதல்வர்!

சென்னை தேனாம்பேட்டையில், 122 ஆவது வார்டில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிக்கு இன்று காலை தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் வாக்களிக்க வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உள்ளாட்சி அமைப்பு என்பது, ஒரு சிறிய குடியரசு. இதனை மகாத்மா காந்தி அடிக்கடி சொல்லியிருக்கிறார்.

உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகத்தான், அரசின் திட்டங்கள் பணிகள் ஆகியவற்றைச் செய்ய முடியும். அதனை உணர்ந்து மக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், ”கோவையில் எந்த சம்பவமும் ஏற்படவில்லை. கடந்த ஆட்சியில் அந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அடாவடித்தனம், அயோக்கியத்தனம் செய்தார். திமுக ஆட்சியில் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

நேற்று கோவை ஆட்சியர் அலுவலகத்தில் துணை ராணுவம் வர வேண்டும் என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ராணுவம் வரக் கூடிய அளவுக்கு அங்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை. தோல்வி பயத்தால், அதனை மூடி மறைப்பதற்கு அவர்கள் நடத்திய நாடகம் தான் இந்த போராட்டம்.

அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடவில்லை. எல்லா ஆதாரங்களும் உள்ளது. சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவு கொடுத்தது போல இந்த தேர்தலிலும் கொடுத்துக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளது. 21 மாநகராட்சிகளிலும் எங்கள் அணிகள் தான் வெற்றி பெறும்.

நகைக்கடனைப் பொறுத்தவரை பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளது. முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தி தற்போது கடன் தள்ளுபடி செய்துகொண்டிருக்கிறோம்” என்றார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

சனி 19 பிப் 2022