மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

‘ஒன்றுபட்டு நிற்கிறோம்’: ராகுல்

‘ஒன்றுபட்டு நிற்கிறோம்’: ராகுல்

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரிய பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், ஒருவார விடுமுறைக்குப் பின்னர் தற்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த வழக்கை விசாரித்து வரும் கர்நாடக உயர் நீதிமன்றம், தீர்ப்பு வரும்வரை மாணவர்கள் எந்தவிதமான மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வரக் கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் பல்வேறு மாணவிகள் ஹிஜாபுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் வகுப்புகளைப் புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். சில இடங்களில் பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர்.

இது மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரும் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்து கொண்டிருக்கின்றனர். ஐந்தாவது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், "ஹிஜாப் பிரச்சினை ஏழை இஸ்லாமிய பெண்களின் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. ஹிஜாப்பை தடை செய்வது குர்ஆனை தடை செய்வதற்கு சமம். இந்த விவகாரம் தனி நபர்களின் மன ஆரோக்கியத்தை பாதிக்கிறது. ஒருவரின் மனரீதியான ஆரோக்கியத்தைக் காப்பது அரசு நிர்வாகத்தின் கடமை. வழக்கு முடியும் வரை இஸ்லாமியர்களுக்கு புனிதமான நாளான வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது ஹிஜாப் அணிய அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று மாணவிகள் தரப்பு வழக்கறிஞர் வினோத் குல்கர்னி வாதாடினார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில், ஹிஜாப் அணிந்த மாணவியுடன், மற்ற மாணவிகள் கைகோத்து செல்லும் புகைப்படத்தை டெக்கான் ஹெரால்டு ஊடகம் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற தலைப்பில் நேற்று வெளியிட்டது.

இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், அந்தப் புகைப்படத்தை பகிர்ந்து, “ஒன்றுபட்டு நிற்கிறோம்”, “இதுதான் எனது இந்தியா” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இவரின் ட்வீட் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக, மாணவிகளின் கல்வியில் பிரச்சினையை வர அனுமதிப்பதன் மூலம், அவர்களின் எதிர்காலத்தை நாடு சூறையாடுகிறது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வெள்ளி 18 பிப் 2022