மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 18 பிப் 2022

670 தேர்தல் விதிமீறல் புகார்கள்: தேர்தல் ஆணையம்!

670 தேர்தல் விதிமீறல் புகார்கள்: தேர்தல் ஆணையம்!

தேர்தல் விதிமீறல் தொடர்பாக பிப்ரவரி 16 வரை 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 19) நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.

தேர்தல் காரணமாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் அளிக்கும் புகார்களைப் பெற சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில் 24 மணி நேரமும் செயல்படும் புகார் மையம் அமைக்கப்பட்டது. இந்த புகார் மையத்தில் கடந்த 27ஆம் தேதி முதல் பலரும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு, வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் பட்டியல், மாதிரி நடத்தை விதிகள், சுவர் விளம்பரம், வேட்பு மனு தாக்கல், சின்னம் ஒதுக்கீடு, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 670 புகார்கள் வந்துள்ளன .

புகார்களின் தன்மைக்கேற்ப அவை சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் உடனடியாக ஆய்வு செய்து புகார்களின் உண்மை தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. அதுபோன்று வாக்குப்பதிவின் போதும் தேர்தல் விதிமீறல் நடந்தால், அதுகுறித்து 18004257072, 18004257073, 18004257074 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வெள்ளி 18 பிப் 2022