மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

ஓய்ந்தது பிரச்சாரம்!

ஓய்ந்தது பிரச்சாரம்!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணைய உத்தரவு படி நிறைவடைந்தது.

நாளை மறுநாள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக, அதிமுக, பாமக, பாஜக, மநீம, நாம் தமிழர் கட்சி எனப் பலமுனை போட்டி நிலவுகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. 2.10 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிக்க உள்ளனர்.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு 48 மணி நேரத்திற்கு முன்பாக பிரச்சாரம் நிறைவடைய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று விறுவிறுப்பாகத் தேர்தல் பிரச்சாரம் நடந்தது.

கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். திமுகவினர் கொடுத்த கொலுசைக் கையில் வைத்துக்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்ட அவர் கோவை மக்கள் இதுபோன்ற பரிசுப் பொருட்களுக்கு எல்லாம் தங்களது தன்மானத்தை மக்கள் அடகு வைக்கமாட்டார்கள் என்றார்.

திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலினும் இன்று கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ” கடந்த தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள், இந்த தேர்தலில் நம்பலாமா என்று மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பிய உதயநிதி , அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி. விரைவில் அவர்கள் சிறை செல்வார்கள்” என்று பேசினார்.

தேனியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், “திமுக 500க்கும் மேற்பட்ட பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை நம்பவைத்துவிட்டது. மாதம் ஆயிரம் ரூபாய் , நகைக்கடன் தள்ளுபடி எனக் கொடுத்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை. எந்த பணக்காரராவது நகைகளை வங்கியில் அடகு வைப்பாரா? நகைகளை அடகு வைத்திருப்பவர்கள் அனைவரும் ஏழைகள்?. ஏழை மக்களை திமுக ஏமாற்றிவிட்டது” என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரையில் பிரச்சாரம் செய்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா, கடந்த 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுவரை தேமுதிகவுக்கு மக்கள் ஏன் வாய்ப்பளிக்கவில்லை எனத் தெரியவில்லை. இந்த தேர்தலில் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

இதுபோன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, தேர்தல் ஆணைய உத்தரவுப் படி இன்று மாலை 6 மணிக்குப் பிரச்சாரம் ஓய்ந்தது.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 17 பிப் 2022