மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

ஆந்திராவிலும் ஹிஜாபுக்கு தடையா?

ஆந்திராவிலும் ஹிஜாபுக்கு தடையா?

கர்நாடகாவைத் தொடர்ந்து ஆந்திராவிலும் ஹிஜாப் விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து பள்ளிகளுக்கு வர தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப்-காவி சால்வை போராட்டம் வன்முறையாக மாற ஆரம்பித்ததையடுத்து, பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவான, எந்தவொரு மாணவரும் மதம் சார்ந்த ஆடைகளை அணிந்து வரக் கூடாது என்பதை சுட்டிகாட்டி முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்புகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஹிஜாப்பை அகற்றினால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று பள்ளி, கல்லூரி நிர்வாகம் கூறுகின்றன. கல்விக்கு இணையாக ஹிஜாப்பும் முக்கியம் என்பதால், அதை அகற்ற முடியாது என்று கூறி மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றும் கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டதால், மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் இன்றும் மனுதாரர்களின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்.

இந்த பிரச்சினைக்கு எப்போது முடிவு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், அண்டை மாநிலமான ஆந்திராவில் ஹிஜாப் சர்ச்சை வெடித்துள்ளது.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள லயோலா கல்லூரியில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் வகுப்புகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது..

இதுகுறித்து அனுமதி மறுக்கப்பட்ட மாணவி கூறுகையில், ”ஆரம்பத்தில் இருந்தே ஹிஜாப் அணிந்துதான் வருகிறோம். எங்களது அடையாள அட்டையில் கூட ஹிஜாப் அணிந்த புகைப்படம் உள்ளது. இப்போது அதை அணிந்துக் கொண்டு வரக் கூடாது என்று கூறுகின்றனர்” என்று கூறினார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்த கல்லூரி முதல்வர் கிஷோர், “ முஸ்லிம் உடையில் மாணவிகள் அல்லது ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இன்று காலையில், நான் ரவுண்ட்ஸ் சென்றிருந்தபோது, மூன்று பெண்கள் கல்லூரிக்கு தாமதமாக வந்தார்கள். அவர்களில் இருவர் முஸ்லிம் உடையில் இருந்தனர். அதனால், அவர்களின் உடையை மாற்ற சொன்னேன். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டு திரும்பி சென்றனர்” என்று கூறினார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினரும் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஆரம்பித்த ஹிஜாப் பிரச்சனை மத்திய பிரதேசத்திலும், புதுச்சேரியிலும் வெடித்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

வியாழன் 17 பிப் 2022