மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

வெல்லப் போவது வெள்ளியா, தங்கமா? கோவை க்ளைமேக்ஸ்!

வெல்லப் போவது வெள்ளியா, தங்கமா? கோவை க்ளைமேக்ஸ்!

பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற போகும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு கோவை மாநகராட்சி வாக்காளர்களுக்கு பணமும் பரிசு பொருட்களும் போட்டிப் போட்டுக் கொண்டு கொடுத்து வருகிறார்கள் திமுக மற்றும் அதிமுக வினர்.

சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களைவிட தற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சி நகர்ப்புறத் தேர்தலில்தான் வாக்காளர்களுக்கு அதிகமான பணமும் கிஃப்டுகளும் வழங்கி வருவதை காணமுடிகிறது.

குறிப்பாக கோவை மாநகராட்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணியும் இன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் யார் வெற்றி பெற போவது என்ற கௌரவ பிரச்சனையால் வாக்காளர்களை விழுந்து விழுந்து கவனித்து வருகிறார்கள்.

100 வார்டுகளில் உள்ள 15 லட்சத்து 38,411 வாக்காளர்களில் 80% வாக்காளர்களுக்கு நேற்று இரவு அதிமுக மற்றும் திமுக இருதரப்பினரும் ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என முழுமையாக விநியோகம் செய்துவிட்டனர். அதாவது ஒரு வாக்காளருக்கு மொத்தம் இரண்டாயிரம் கிடைத்துவிட்டது.

திமுக சார்பில் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூடுதலாக வாக்காளர்களின் வீட்டுக்கு வீடு ஒரு ஹாட் பாக்ஸூம் 20 கிராமில் ஒரு ஜோடி வெள்ளி கொலுசும் வழங்கியிருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கோவை மாவட்டத்தை அதிமுக கோட்டையாக வைத்திருப்பவர். கோவை மாநகராட்சி தன் கைவிட்டு போய்விடக்கூடாது என்ற கௌரவ பிரச்சனையால் செந்தில் பாலாஜியின் வெள்ளிக் கொலுசை முந்துவதற்காக வீட்டுக்கு ஒரு தங்க மூக்குத்தி வழங்கத் திட்டமிட்டு மூக்குத்திகள் இன்று வந்து இறங்கியிருக்கின்றன.

அமைச்சர் செந்தில் பாலாஜி கொடுத்த வெள்ளி கொலுசா, முன்னாள் அமைச்சர் வேலுமணி கொடுக்கப் போகும் தங்க மூக்குத்தியா? வெல்லப் போவது எது தங்கமா வெள்ளியா தீர்மானிக்க போவது வாக்காளர்களின் கையில்தான் உள்ளது.

வாக்காளர்களுக்கு வெள்ளிக் கொலுசும் தங்க மூக்குத்தியும் கொடுத்து ஜனநாயக தேவதையை நிர்வாணம் ஆக்கி விட்டார்கள் திமுகவும் அதிமுகவும்.

வணங்காமுடி

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 17 பிப் 2022