மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 17 பிப் 2022

பரிசுக்காக மக்கள் தன்மானத்தை அடகு வைக்கமாட்டார்கள்: அண்ணாமலை

பரிசுக்காக மக்கள் தன்மானத்தை அடகு வைக்கமாட்டார்கள்: அண்ணாமலை

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

காளப்பட்டி மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அவர் பேசுகையில், “தேர்தலில் வெற்றி பெற்று 8 மாதம் கடந்தும் திமுக முழுமையாகத் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. தமிழகத்தில் ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்த கட்சிகள் எதுவும் செய்யாததால் எதுவும் மாறவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கோவைக்கு கொரோனா தடுப்பூசியைக் குறைத்தனர். இதுதான் இவர்கள் செய்த முதல் சாதனை. இதையடுத்து கோவை மக்கள் மற்றும் பாஜகவினர் சண்டை போட்ட பின்னர், மாநிலத்தின் முதல்வர் ஸ்டாலின் கோவை ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு வந்து கவச உடைகளை அணிந்துகொண்டு மருந்துகளைக் கொடுத்தார். இவையெல்லாம் நாம் பார்த்தோம்.

கோவை மக்கள் அதிக தன்மானம் கொண்டவர்கள். எனவே இவர்கள் கொடுக்கும் கொலுசு ஹாட் பாக்ஸ் மற்றும் 1000 ரூபாய் பணத்திற்காக தங்கள் தன்மானத்தை அடகு வைக்க மாட்டார்கள்.

கோவையில் பாதாளச் சாக்கடைகள் சரியாகப் பராமரிக்கப்படவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காகப் பிரதமர் மோடி ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி கொடுத்திருக்கிறார். கோவைக்கு வராத பணம் கிடையாது. ஆனால் பெரிய கட்சிகளைச் சேர்ந்த காண்ட்ராக்டர்கள் 20, 30 சதவிகிதம் கமிஷன் அடிக்கின்றனர். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் எப்படி மாற்றம் ஏற்படும். மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் தாமரை வெற்றி பெற வேண்டும்.

கொரோனா காலத்தின் போது அனைவரும் உயிர் பிழைப்போமா என்று பயந்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் 30 கோடி பேர் உயிர் இழப்பார்கள் என்று ராகுல்காந்தி ஆருடம் கூறினார்.

ஆனால் மக்களை கொரோனாவில் இருந்து காக்க 122 கோடி தடுப்பூசியை மத்திய அரசு போட்டுள்ளது” என்றார்.

பொங்கல் தொகுப்பில் தரமில்லை, ஊழல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டிய அண்ணாமலை

“இதனால்தான் மாநிலத்தின் முதல்வர் வீட்டில் அமர்ந்து கொண்டு வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார். மைதானத்தில் இறங்காமல் கிரிக்கெட் விளையாடுவதைப் போல முதல்வர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். 2.64 கோடி பேர் ஓட்டு போடும் தேர்தலில் மக்களை நேரடியாகச் சந்திக்க அவர் வரவில்லை” என்று விமர்சித்தார்.

மேலும் 20 ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து நெரிசல் இல்லாமல் கோவை எப்படி இருந்ததோ, அதுபோல கோவையை பாஜக உருவாக்கும். எனவே கோவையின் மாற்றத்திற்காகத் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

வியாழன் 17 பிப் 2022