மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

இவர் ஒரு பொம்மை முதல்வர்: எடப்பாடி பழனிசாமி

இவர் ஒரு பொம்மை முதல்வர்: எடப்பாடி பழனிசாமி

நகர்ப்புற தேர்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி நகராட்சி, பர்கூர், காவேரிப்பட்டினம், ஊத்தங்கரை, நாகரசம்பட்டி ஆகிய பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, “சட்டமன்ற தேர்தலின் போது 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, அதை நிறைவேற்ற முடியாமல் நேரில் சென்றால் மக்கள் கேட்பார்கள் என முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் பிரச்சாரம் செய்கிறார். திமுக ஒரு கட்சி அல்ல. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி” என்று கடுமையாக விமர்சித்தார்.

இதைத்தொடர்ந்து சேலத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது. இப்போது தினம் தோறும் செய்தித் தாள்களில் பார்த்தால் கொலை, செயின் பறிப்பு என குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

ஆனால் இதைப் பற்றி எல்லாம் இன்றைய ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை. அரசு அதிகாரிகளுக்கு திமுக ஆட்சியில் சுதந்திரம் இல்லை. அதிமுக ஆட்சியில் பொங்கல் தொகுப்பு கொடுத்தோம். 2500 ரூபாய் அனைத்து அட்டைதாரர்களுக்கும் கொடுத்தோம். இதனால் மக்கள் சந்தோஷமாக பொங்கலைக் கொண்டாடினார்கள்.

இந்த ஆட்சியில் 21 பொருட்களுடன் பொங்கல் தொகுப்பைக் கொடுத்தார்கள். ஆனால் பல இடங்களில் இந்த தொகுப்புக்கான பை கொடுக்க வில்லை. பொருட்களை முழுமையாக கொடுக்கவில்லை. கொடுக்கப்பட்ட பொருளிலும் தரம் இல்லை. ஸ்டாலின் கொடுத்த வெல்லத்தை யாராலும் மறக்க முடியாது.

இங்கு கிடைக்காது என்று வெளிமாநிலத்திலிருந்து வாங்கி வெல்லத்தை கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். இதை எல்லாம் கேட்டால் எங்கு தவறு நடந்திருக்கிறது என்கிறார். எல்லா ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் பொங்கல் தொகுப்பு முறைகேடு குறித்து செய்திகள் வந்தது. ஆனால் அதைப் பார்க்க முதல்வருக்கு நேரமில்லை.

ஏனென்றால் அவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருக்கிறார். டீ கடைக்குச் சென்று டீ குடிக்கிறார். நடைப்பயணம் போகிறார். ஜிம்முக்கு சென்று அங்கு வெயிட்டை தூக்கிக்கொண்டிருக்கிறார். இதற்காகவா மக்கள் உங்களை முதல்வராக்கினார்கள்.

மக்களுக்காகப் பொங்கல் தொகுப்பு கொடுக்கவில்லை. 500 கோடி ரூபாய் சுருட்டுவதற்காக வழங்கியிருக்கிறார்கள். மூச்சுக்கு முந்நூறு தடவை தமிழ், தமிழ் என்று பேசுகிறார் முதல்வர். ஆனால் பொங்கல் தொகுப்பு பாக்கெட்டில் எல்லாம் இந்தியில் எழுதப்பட்டிருக்கிறது. பேசுவது ஒன்று செய்வது ஒன்று. இவர் பொம்மை முதலமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்தார்.

-பிரியா

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

3 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையா?

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் ...

7 நிமிட வாசிப்பு

எடப்பாடி நடத்தும் எதுவுமே செல்லாது: தேர்தல் ஆணையத்திடம் பன்னீர் புகார்!

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் ...

4 நிமிட வாசிப்பு

தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி: தலைமைக் கழகக் கூட்டத்தில் முடிவு!

புதன் 16 பிப் 2022