மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கான புதிய பாதுகாப்பு விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

இருசக்கர வாகனத்தில் செல்வோர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வாகனத்தில் பின்னாடி உட்கார்ந்திருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. தற்போது ,இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதிமுறை அமுலுக்கு வருகிறது.

1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதி 138, பிப்ரவரி 15, 2022 அன்று திருத்தப்பட்டதன் அடிப்படையில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதிமுறையை அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிமுறை, இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. குழந்தைகள் அணியும் ஹெல்மெட்கள் அரசு நிர்ணயித்த விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளுக்கான ஹெல்மெட்டுகளை தயாரிக்கத் தொடங்குமாறு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்திவிட்டது.

மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் குழந்தைகளுடன் பயணிக்கும் போது வாகனத்தின் வேகம் மணிக்கு 40 கி.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணம் செய்யும் போது குழந்தைகள் கீழே விழாமல் இருக்க பாதுகாப்பு சாதனம் ஒன்றையும் வைத்திருக்க வேண்டும். அந்த சாதனம் 30 கிலோ எடை வரை தாங்கும் அளவில் இருக்க வேண்டும். மத்திய அரசின் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்ட விதி 2023 பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த விதிகளை மீறுவோருக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து உள்ளிட்ட தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 16 பிப் 2022