மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 16 பிப் 2022

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் சோதனை!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் சோதனை!

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நண்பரும், கூட்டுறவு வங்கி மாநில தலைவருமான இளங்கோவனின் வீட்டில் இன்று (பிப்ரவரி 16) காலை முதல் பறக்கும் படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதாக அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் பரஸ்பர குற்றம்சாட்டி வருகின்றன.

அதே சமயத்தில் தேர்தல் பறக்கும் படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நண்பர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சி, ஆத்தூர், நரசிங்கபுரம், மேட்டூர், எடப்பாடி தாரமங்கலம் என 6 நகராட்சிகள் மற்றும் 31 பேரூராட்சிகளில் மொத்தம் 699 வார்டுகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அனைத்து வார்டுகளையும் கைப்பற்ற அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

இந்த சூழலில் ஈபிஎஸ் நண்பரும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவருமான இளங்கோவன் வீட்டில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமிக்கு மிக நெருக்கமானவரான இளங்கோவனின் புத்திர கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் இளங்கோவன் வீட்டில் சேலம் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் காலை 8:30 முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி பொருட்கள், 29.77 லட்சம் ரூபாய் ரொக்கம் ,சொகுசு கார்கள் 3 கணினி ஹார்ட் டிஸ்க் மற்றும் சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 16 பிப் 2022