மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

நேற்று சென்னை-இன்று டெல்லி தமிழ்நாடு இல்லம்!

நேற்று சென்னை-இன்று டெல்லி தமிழ்நாடு இல்லம்!

தஞ்சை மாணவி வழக்கில் நியாயமான விசாரணை நடத்தக் கோரி ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இன்று டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒருமாத காலமாக தஞ்சை மாணவி விவகாரம் தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது. மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி அளித்தது.

இந்த நிலையில், மாணவி வழக்கு தொடர்பாக நேற்று பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சென்னையில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி பெறாமல் தடை செய்யப்பட்ட இடத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால், போலீசார் அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களுக்கு பிப்ரவரி 28ஆம் தேதிவரை நீதிமன்றகாவல் விதிக்கப்பட்டது.

ஏபிவிபி அமைப்பினர் சென்னையில் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாணவி வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கக் கோரியும் டெல்லி சாணக்யாபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக மாணவி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி இவ்வமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. தற்போது, இரண்டாவது முறையாக ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் தமிழ்நாடு இல்லம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டனர்.

தஞ்சை மாணவி புகைப்படத்தை கையில் ஏந்தியபடி, மாணவி வழக்கு நியாயமான முறையில் விசாரிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள ஏபிவிபி அமைப்பினரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்தமுறை போன்று, இந்த முறையும் போராட்டம் வன்முறையாக மாறிவிடக் கூடாது என்பதால், தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிட சென்ற மாணவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 15 பிப் 2022