மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களைக் குறி வைத்துள்ள வருமான வரித்துறை!

டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்களைக் குறி வைத்துள்ள வருமான வரித்துறை!

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் வாட்ஸ்அப் ஆன் லைனில் வந்தது.

"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக என இரு தரப்பிலும் தேர்தலுக்கு கடைசி சில நாட்களில் வாக்குக்கு பணம் கொடுக்கும் படலம் நடக்க இருக்கிறது.

இரு கட்சிகளிலும் தலைமையிலிருந்து பணம் தரப்படாத நிலையில் ஆங்காங்கே இன்னாள் அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களும் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் கண்கள் திமுகவை நோக்கியே கழுகு பார்வை பார்த்து வருகின்றன.

தமிழக பாஜக தலைவர் ஆளுநரை எப்போது சென்று சந்தித்தாலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் இருவரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படி சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பில் தமிழகத்தில் திமுக அமைச்சர்கள் பற்றிய ஒரு ஃபைலை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை. ஆட்சி அமைந்த திலிருந்து எந்தெந்த அமைச்சர்கள் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள் என்றும், அதில் குறிப்பிட்ட ஒரு பங்கை கட்சி மேலிடத்துக்கு அனுப்புகிறார்கள் என்றும் தனக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாக வைத்து ஒரு மேப் வரைந்து அதை ஆளுநரிடம் கொடுத்திருக்கிறார் அண்ணாமலை.

இந்த விவகாரம் ஆளுநர் மூலம் டெல்லியிலும் டிஸ்கஸ் செய்யப்பட்டிருக்கிறது.

பொறுத்திருங்கள் ஆதாரம் கிடைத்ததும் அதிரடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று டெல்லியில் இருந்து சொல்லியிருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் தற்போது உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி சில முக்கியமான அமைச்சர்கள் பண விநியோகத்தை பலப்படுத்தி இருப்பதாக பாஜகவுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலின் கிளைமாக்ஸ் நேரத்தில் இந்தப் பணம் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது, எங்கிருந்து எங்கே எடுத்துச் செல்லப்படுகிறது, எங்கெங்கு வினியோகிக்கப்பட இருக்கிறது என்பது உள்ளிட்ட தகவல்களை பாஜகவினர் திரட்டியுள்ளனர்.

இந்த வகையில் சேலம், கோவை, திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் அதிக அளவு பணம் வினியோகிக்கப்படலாம் என்றும் இதே போல மற்ற மாநகராட்சிகளிலும் பண விநியோகம் சராசரியாக நடக்கலாம் என்றும் தகவல் கிடைத்திருக்கிறது.

இதை ஒட்டி பாஜகவின் தலைமைக்கு அண்ணாமலை அளித்த தகவல் மற்றும் அழுத்தத்தின் பேரில் ஒன்றிய அரசின் வருமான வரித்துறை டீம் அமைக்கப்பட்டுள்ளது. திமுக அமைச்சர்களை கண்கொத்திப் பாம்பாக கண்காணித்து வருகின்றனர்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வேலூர் தொகுதியில் கட்டுக்கட்டாக பணத்தை வருமான வரித்துறை கைப்பற்றியதையடுத்து துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்ட அந்தத் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். அதேபோல கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதும் எ.வ.வேலு, திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உள்ளிட்டோர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.

இந்த வகையில் உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி சில அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்த வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

ஏற்கனவே அதிமுக இந்த உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடுகள் அதிகமாக நடக்கின்றன என்று ஆளுனரிடம் புகார் தெரிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமாரும் சி.வி. சண்முகமும் கடந்த வாரம் ஆளுநரை சந்தித்தார்கள். அப்போது சட்டம் ஒழுங்குப் பிரச்சினை குறித்து புகார்களை அவர்கள் ஆளுநரிடம் அளித்தனர்.

அதையடுத்து கோவை மாவட்ட கலெக்டர் , எஸ்பி யிடம் அம்மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான எஸ். பி. வேலுமணி உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவினர் ரவுடிகளை கட்டவிழ்த்துவிட்டு உள்ளாட்சித் தேர்தலில் ஏற்படுத்தி வெற்றிபெற பார்க்கிறார்கள் என புகார் அளித்தனர்.

அதிமுக இப்படி புகார்கள் அளித்து வரும் நிலையில் பாஜகவோ திமுக வுக்கு எதிராக வருமான வரித் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கத் தயார் ஆகிறது. பண நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரித்து வரும் வருமான வரித் துறை டெல்லி மேலிடத்தின் சிக்னலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ்அப்.

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 15 பிப் 2022