மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 பிப் 2022

உத்தரகாண்ட், கோவா, உபி தேர்தல்: பதிவான வாக்குகள்!

உத்தரகாண்ட், கோவா, உபி தேர்தல்: பதிவான வாக்குகள்!

உத்தரகாண்ட், கோவா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த நிலவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்துக்கும், 40 தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்துக்கும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதுபோன்று 400க்கும் அதிகமான தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

கோவா, உத்தரகாண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் என மூன்று மாநிலங்களில் மொத்தம் 165 தொகுதிகளில் 36,823 வாக்குச்சாவடிகளில் 2.95 கோடி பேர் நேற்று வாக்களித்தனர்.

சமூக இடைவெளி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி மக்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற தேர்தலின்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. ஒரு சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானதால் அவை சரி செய்யப்பட்டு தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மூன்று மாநிலங்களிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவ படையினர் மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, எவ்வித அசம்பாவித சம்பவங்களும் இன்றி தேர்தல் அமைதியாக நடந்தது.

நேற்று மாலை மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின் வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தச் சூழலில் நேற்று பதிவான வாக்குப்பதிவு சதவிகிதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவாவில் 78.94 சதவிகித வாக்குகளும், உத்தரகாண்டில் 62.5 சதவிகித வாக்குகளும் உத்தரப் பிரதேசத்தில் 60.44 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதுபோன்று இந்த மூன்று மாநிலங்களில் இருந்து கணக்கில் வராத 224 கோடி ரூபாய் பணம் மதுபானம் மற்றும் போதைப் பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

முன்னதாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கோவாவில் 82.56% வாக்குகள் பதிவானது. அதன்படி 3.62 சதவிகித வாக்குகள் இந்த தேர்தலில் குறைந்துள்ளது. உத்தரகாண்டில் 2017ல் 64.72 வாக்குகள் பதிவானது. அதன்படி 2.22% வாக்குகள் இந்த ஆண்டு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

செவ்வாய் 15 பிப் 2022