அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டம் வாபஸ்… என்ன காரணம்?

politics

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மாநில அரசின் முடிவை எதிர்த்து இன்று (பிப்ரவரி 14) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் என அறிவித்திருந்திருந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளார். அதற்கான காரணம் குறித்தும் விளக்கியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.
இதற்கு வருடத்துக்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கிடையே, சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, மாநில அரசின் முடிவை எதிர்த்து இன்று (பிப்ரவரி 14) முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளேன் என அறிவித்தார்.
இந்த நிலையில், ஒயின் விற்பனைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்ட அறிவிப்பை அன்னா ஹசாரே வாபஸ் பெற்றுள்ளார். அவரது சொந்த கிராமமான ராலேகான் சிந்தியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பேசிய அன்னா ஹசாரே, “குடிமக்களின் ஆலோசனைகள் மற்றும் ஆட்சேபனைகளுக்காக அமைச்சரவையின் முடிவை இப்போது மாநில அரசு முன்வைக்க முடிவு செய்துள்ளது. அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகுதான் அரசாங்கத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும் என கிராம மக்களிடம் கூறினேன். இதனால் பிப்ரவரி14ஆம் தேதி நடைபெறவிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட முடிவு செய்துள்ளேன்” என அறிவித்துள்ளார்.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *