மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்!

தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள்!

சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து பிறகு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முனீஸ்வர் நாத் பண்டாரி நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னையில் பதவியேற்றுக் கொள்கிறார்.

பதவியேற்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல்கள் வந்துள்ளன.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் என்ற அடிப்படையில் இவர்கள் இருவரும் தலைமை நீதிபதி பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக தங்களது தேர்தல் பிரச்சாரங்களை மாற்றி அமைத்துள்ளனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீப் பானர்ஜி கடந்த நவம்பர் மாதம் மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அந்த இடமாற்றத்தை மறு பரிசீலனை செய்யும்படி பார் கவுன்சிலின் மூத்த வழக்கறிஞர்கள் கொலீஜியத்திடம் வலியுறுத்தியும்... தலைமை நீதிபதி இடமாறுதலுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மரபு ரீதியாக நடைபெறும் பிரிவுபசார நிகழ்ச்சியை கூட தவிர்த்துவிட்டு புறப்பட்டார் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி.

அப்போது மனம் திறந்து ஒரு கடிதத்தை வெளியிட்டார் தலைமை நீதிபதி. அதில், "இதுநாள் வரை ஆதிக்க கலாச்சாரத்தினுள் பணியாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள். அதை முழுமையாக என்னால் தகர்த்து எறிய முடியவில்லை. இந்த அழகான மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்"என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டிருந்தது நீதித்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதற்கு பிறகுதான் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக கடந்த நவம்பர் 22 ஆம் தேதி பதவியேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரியை தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்ததை அடுத்து கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி குடியரசுத் தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரியை நியமித்து உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து தலைமை நீதிபதி பதவியேற்பு விழா நாளை பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி, தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோருடன் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் துணைத் தலைவரான ஓ பன்னீர்செல்வம் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வணங்காமுடி வேந்தன்

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

ஞாயிறு 13 பிப் 2022