மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 பிப் 2022

போதைப்பொருள்: ஐ-பேக் உறுப்பினர் கைது!

போதைப்பொருள்: ஐ-பேக் உறுப்பினர் கைது!

இந்தியாவில் தேர்தல் வியூக நிபுணர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் பிரசாந்த் கிஷோர். இவர் Indian Political Action Commitee எனப்படும் ஐ-பேக் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். தன்னுடைய யுக்தி மூலம் பல கட்சிகளை ஆட்சியில் அமர வைத்துள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுகவுக்கும், மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸுக்கும் ஐ-பேக் நிறுவனம் பணியாற்றியது. கடந்தாண்டு நடைபெற்ற மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கோவா, திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் தனது கட்சியை வளர்க்கும் பொறுப்பை மம்தா பானர்ஜி ஐ-பேக் நிறுவனத்திடம் ஒப்படைத்தார்.

வரும் பிப்ரவரி 14ஆம் தேதி கோவாவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோவா தலைநகரான போர்வோர்மில் வில்லாக்களைக் குத்தகைக்கு எடுத்து தேர்தலுக்கான பணிகளை ஐ-பேக் நிறுவனம் செய்து வருகிறது.

இந்த நிலையில், ஐ-பேக் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் மக்களுக்குப் பணம் கொடுத்து வாக்கை விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக போர்வோர்ம் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில், கடந்த வெள்ளிக்கிழமை(பிப்ரவரி 11) ஐ-பேக் பணியாளர்கள் தங்கியிருந்த வில்லாவில் போலீஸார் சோதனையிட்டனர். சோதனையில் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருட்கள் (NDPS) சட்டத்தின் 38ஆவது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், 28 வயதான ஒருவரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “போர்வோர்மில் ஐ-பேக் நிறுவனத்தைச் சேர்ந்த பணியாளர்கள் எட்டு வில்லாக்களைக் குத்தகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். எட்டு வில்லாக்களிலும் ரெய்டு நடந்தது. அதில், ஒரு வில்லாவில் இருந்து போதைப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக விகாஸ் நகல் என்பவரை கைது செய்துள்ளோம். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட நகல் ஹரியானாவைச் சேர்ந்தவர் என்றும், தேர்தலுக்காக கோவாவில் முகாமிட்டுள்ள ஐ-பேக் குழுவுடன் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது” என்று கூறினர்.

ஐ-பேக் நிறுவனத்துடன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தொடர்பில் இருப்பதால், இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பார்க்கப்படுகிறது.

-வினிதா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

ஞாயிறு 13 பிப் 2022