மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

ஊரடங்கு நீட்டிப்பு: எதற்கெல்லாம் அனுமதி?

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 28-01-2022இன்படி, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகின்ற 15ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்ரவரி 12) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுகாதாரத் துறையினர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து ,தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா ஊரடங்கை மார்ச் 2ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்று பரவலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும் பின்வரும் கட்டுப்பாடுகள் மட்டுமே 16-02-2022 முதல் 02-03-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும்.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.

இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

மேற்கண்ட கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுகின்றன.

நர்சரி பள்ளிகள்(எல்கேஜி, யூகேஜி) மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள்(ப்ளே ஸ்கூல்) திறக்க அனுமதியளிக்கப்படுகிறது.

பொருட்காட்சிகள் நடத்த அனுமதியளிக்கப்படுகிறது.

தியேட்டர்களில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது.

துணிக்கடைகள், நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகள், உடற்பயிற்சி கூடங்கள் 100% வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம். அனைத்து உள் அரங்குகளில் கருத்தரங்கு, இசை, நாடக நிகழ்ச்சிகளுக்கு 100% பார்வையாளர்கள் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள், கடைகளில் 100% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை கடைபிடித்து மற்றும் இரண்டு தவணை தடுப்பூசியினை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து மக்களைக் காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்கள் அனைவரையும் கனிவுடன்கேட்டுக் கொள்கிறேன் “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

-வினிதா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

சனி 12 பிப் 2022