மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள்: கமல்

மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாயுங்கள்: கமல்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கவும், ஏலம் விடப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க கோரியும், இலங்கை அரசை கண்டித்தும், ராமேஸ்வர மீனவர்கள் கடந்த நான்கு நாட்களாக காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனின் அடுத்தகட்டமாக, நேற்று மீன்பிடி துறைமுகத்தில் உள்ள மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் இருந்து சென்னை செல்லும் ரயிலை மறிப்பதற்காக 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதையறிந்து வந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கு உடன்படாத மீனவர்கள் ரயில் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அடுத்த 15 நாட்களுக்குள் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் ஏலமிடப்பட்ட படகுகளை தமிழக மீனவர்களிடம் மீண்டும் திருப்பி தர வேண்டும். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றபடாவிட்டால், ராமேஸ்வரத்தில் உள்ள அனைத்து படகுகளின் உரிமம் மற்றும் மீனவர்கள் இந்திய பிரஜை இல்லை என குறிப்பிடும் வகையில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மீனவர் அடையாள அட்டை உள்ளிட்டவைகளை ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க போவதாக கூறி மீனவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

மீனவர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில்,” இலங்கைச் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்கவும், இலங்கை அரசால் ஏலம் விடப்பட்ட படகுகளை மீட்கக் கோரியும், இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைக் கண்டித்தும் ராமேஸ்வரம் மீனவர்கள் போராடி வருகிறார்கள். தமிழக மீனவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

சனி 12 பிப் 2022