மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 பிப் 2022

ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த பாஜகவினர்!

ஹெல்மெட் அணிந்து பிரச்சாரம் செய்த பாஜகவினர்!

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, மக்களை கவருதற்காக வேட்பாளர்கள் நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிற நிலையில், பாஜகவினர் ஹெல்மெட் அணிந்து, கையில் தாமரை மலரை வைத்து பிரச்சாரம் மேற்கொண்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிடும் பாஜக, கொங்கு மாவட்டங்கள் மற்றும் தென்மாவட்டங்களில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

பாஜக சார்பில் கோவை செல்வபுரத்தில் 76வது வார்டில் கார்த்திக் என்பவர் போட்டியிடுகிறார். இவர் நேற்று முன்தினம் தனது தொண்டர்களுடன் தெலுங்குபாளையம் புதூர் ராஜீவ் நகர் தெருவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் சிலர் கற்களை வீசியும், குப்பைகளையும் வீசி தாக்கியதாக அவர்கள் தெரிவித்தனர். இதில் முனீஸ்வரன் என்பவருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக பாஜகவினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால், உஷாராகிக் கொண்ட கார்த்திக் மற்றும் அவரது தொண்டர்கள் அனைவரும், கல் வீசினாலும் தலையில் அடிபடாதவாறு நேற்று ஹெல்மெட் அணிந்தபடி வாக்கு சேகரித்தனர்.

கையில் தாமரை பூ, தலையில் ஹெல்மெட் அணிந்து பாஜகவினர் வாக்கு கேட்ட சம்பவம் தொடர்பான புகைப்படமும், வீடியோவும் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று முன்தினம் சிலர் எங்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு கருதி ஹெல்மேட் அணிந்து வந்தோம். இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளோம். கல் வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் போராட்டம் நடத்துவோம். பாஜகவினருக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. எனது வெற்றியை முறியடிக்க சமூக விரோதிகள் சதி செய்கின்றனர். அதனை முறியடித்து வெற்றி பெறுவேன் என்று கார்த்திக் கூறினார்.

கோவை மாநகராட்சி 76வது வார்டில் திமுக சார்பில் ராஜ்குமாரும், அதிமுக சார்பில் கருப்புசாமியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

சனி 12 பிப் 2022