மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 பிப் 2022

சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்த மதிமுக!

சமூக நீதி கூட்டமைப்பில் இணைந்த மதிமுக!

பிற்படுத்தப்பட்ட பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட நலன்களைப் பாதுகாத்திட, அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என்று கடந்த ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக கூட்டமைப்பில் இணைய வருமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ஃபரூக் அப்துல்லா, சரத் பவார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி, எச்.டி. தேவேகவுடா, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், மெஹ்பூபா முப்தி, உத்தவ் தாக்கரே, அரவிந்த் கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ், ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி, ஹேமந்த் சோரன், அகிலேஷ் யாதவ், மாயாவதி, ஓ.பன்னீர்செல்வம், வைகோ, ராமதாஸ், திருமாவளவன் என 37 அரசியல் கட்சி தலைவர்களுக்குக் கடிதம் எழுதினார்.

முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமூக நீதி கூட்டமைப்பில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லியை தங்கள் கட்சிப் பிரதிநிதியாக நியமித்தார்.

அதுபோன்று ஜம்மு-காஷ்மீரின் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினின் அழைப்பு கடிதத்தை ஏற்று, அனைத்திந்திய சமூக நீதிக் கூட்டமைப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதிநிதியாக, கழகத்தின் தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி அந்தரிதாஸ் செயல்படுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நேற்று அறிவித்துள்ளார்.

சமூக நீதி கூட்டமைப்பில் அதிமுக இணையாது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வருக்குக் கடிதம் எழுதியது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா? ...

4 நிமிட வாசிப்பு

ராகுலையும் கட்டிப்பிடித்து பேரறிவாளனையும் கட்டிப்பிடிப்பதா?  ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கேள்வி

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

4 நிமிட வாசிப்பு

பேரறிவாளன் விடுதலை: மோடிக்கு காங்கிரஸ் கேள்வி!

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

4 நிமிட வாசிப்பு

வைகோ இல்லை என்றால் சாத்தியமே இல்லை: பேரறிவாளன்

வெள்ளி 11 பிப் 2022