மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 பிப் 2022

சர்வதேச பிரச்சனையாகிறது ஹிஜாப்: இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்!

சர்வதேச பிரச்சனையாகிறது ஹிஜாப்:  இந்திய தூதருக்கு பாகிஸ்தான் சம்மன்!

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்துள்ள விவகாரம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப்-காவி சால்வை போராட்டம் கலவரமானதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. மேலும், பெங்களூரில் கல்வி நிறுவனங்களுக்கு அருகே போராட்டம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நிலைமை ஒரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு, மற்றும் தெலங்கானாவில் போராட்டம் நடைபெற்று வருகிற நிலையில், தற்போது இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாகியுள்ளது.

இதுதொடர்பாக பாகிஸ்தான் அரசு, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அதில், “கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குரியது. முஸ்லிம் பெண்களுக்கு எதிரான இந்த சம்பவம் வருத்தமும் அளிக்கிறது. கர்நாடகாவில் மாண்டியா நகரில் கல்லூரி ஒன்றில் மாணவி ஒருவரை காவி சால்வை அணிந்த ஆண்கள் குழு சூழ்ந்து வந்து கோஷமிட்ட வீடியோவைக் குறிப்பிட்டு, இந்தியாவில் உள்ள முஸ்லிம் பெண்களின் "பாதுகாப்பை" இந்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை டெய்லி பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி , “முஸ்லிம் பெண்களின் கல்வியைப் பறிப்பது என்பது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும். இந்த அடிப்படை உரிமையை மறுப்பதும், ஹிஜாப் அணிந்ததற்காக அவர்களைப் பயமுறுத்துவதும் முற்றிலும் அடக்குமுறையாகும். இது முஸ்லிம்களை அடக்க நினைக்கும் இந்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை உலகம் உணர வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து பள்ளி செல்ல தடை விதித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியத் தலைவர்கள் முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளி மலாலா யூசப்சாயி கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

வியாழன் 10 பிப் 2022