மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 பிப் 2022

தேர்தல்: நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

தேர்தல்: நான்கு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அந்தப் பகுதிகளைச் சுற்றி 5 கி.மீ தூரம் வரை உள்ள மதுபானக் கடைகள் இயங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் வருகிற 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. அதனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி இரவு 12 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, வாக்குப் பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணுகை நாளில் வாக்குகள் எண்ணப்படும் பகுதிகளிலும், அந்தப் பகுதிகளுக்கு அருகில் 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதுக்கூடம் திறப்பதோ அல்லது அதை அந்தப் பகுதிகளில் எடுத்துச் செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளில் எந்தவித அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

புதன் 9 பிப் 2022