மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 3 பிப் 2022

நீதிபதி நியமனத்தில் எஸ்.சி.,எஸ்.டி பெண்களுக்கு முன்னுரிமை: சட்டத்துறை அமைச்சர்!

நீதிபதி நியமனத்தில் எஸ்.சி.,எஸ்.டி பெண்களுக்கு முன்னுரிமை: சட்டத்துறை அமைச்சர்!

நீதிபதிகள் நியமனத்தின்போது எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற கொலிஜியத்துக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இன்று(பிப்ரவரி 3) மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, "சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள 75 நீதிபதிகளில் 13 பேர் பெண் நீதிபதிகள் உள்ளனர். ஆனால், ஐந்து மாநிலங்களில் பெண் நீதிபதிகளே இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது” என்று கூறிய அவர், "நீதிபதி நியமனங்களில் எஸ்.சி., எஸ்.டி., மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, “உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் உள்ள 34 நீதிபதிகளில் முதன்முறையாக 4 பெண் நீதிபதிகள் இருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் சட்ட அமைச்சராக பதவியேற்றதும் 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். உயர்நீதிமன்றத்தில் உள்ள 1098 நீதிபதிகளில் 83 பெண் நீதிபதிகள் உள்ளனர்.

நீதிபதிகளாக நியமனம் செய்வதற்கான பெயர்களை பரிந்துரைக்கும் போது, எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான கொலிஜியத்திடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

கேள்வி:பதில்

-வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

வியாழன் 3 பிப் 2022