மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் போஸ்டர்!

வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் போஸ்டர்!

கிராம இளைஞர்கள் தங்களைச் சுற்றி நடக்கும் அரசியலைத் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். அதனுடன் தங்கள் கிராமத்துக்கு எந்தெந்த திட்டத்துக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது, அதில் எவ்வளவு தொகை கிராம நலனுக்காகச் செலவு செய்யப்படுகிறது என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டு, அதுகுறித்து ஊராட்சித் தலைவர்களிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு இளைஞர்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றனர்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவுக்கு உட்பட்டது குருவிகுளம் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து போஸ்டர் ஒன்றை ஊர் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

அதில், “ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு ஓட்டுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம். கிராம சபைக் கூட்டங்களில் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களால் வரவு செலவு கணக்குகள் கேட்கப்படும். அவ்வாறு கேட்டு அறியப்பட்ட கணக்குகள் மீண்டும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்களை வைத்து சரி பார்க்கப்படும்.

ஊழல் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டால் ஊழல் செய்தவர் பெயர், புகைப்படம், பதவி போன்றவை குருவிகுளம் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும். மேலும் இதுகுறித்து மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்புத் தடுப்புத் துறையில் புகார் செய்யப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த போஸ்டர் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது அடிக்கப்பட்டது.

தற்போது 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் இந்த போஸ்டரை தேடிப்பிடித்து தற்போது சமூக வலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

-வினிதா

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை! ...

3 நிமிட வாசிப்பு

சொந்த ஊரை தாண்ட முடியாது: அண்ணாமலைக்கு அமைச்சர் எச்சரிக்கை!

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ...

5 நிமிட வாசிப்பு

தூக்கிய அண்ணாமலை தொட்டுக் கும்பிட்ட ராஜா: அரசியல்வாதிகளை அடக்கிய ஆதீனம்!

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

4 நிமிட வாசிப்பு

அரசியல்வாதிகள் கைப்பற்ற முடியாத பட்டினப் பிரவேசம்!

புதன் 2 பிப் 2022