மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்!

தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது: நீதிமன்றம்!

தேர்தல் பணிக்கு யாரை எங்கு நியமிப்பது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது எனச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகளைத் தேர்தல் அலுவலர்களாக நியமிக்கக் கோரி அதிமுக பிரமுகர் பாபு முருகவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பெரும்பாலும் தபால் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெறுவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இதனைத் தடுக்கும் விதமாக ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த ஊரகப்பகுதி அதிகாரிகளை தேர்தல் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என்று விண்ணப்பித்த மனுவைப் பரிசீலிக்கும் படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்த மனு இன்று (பிப்ரவரி 2) பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள் இதுபோன்ற வழக்குகள் கண்டிக்கத்தக்கது என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

அதோடு தேர்தல் பணியில் யாரை எங்கு பணியமர்த்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்றும் கூறினர்.

இதையடுத்து வழக்கை திரும்பப்பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதையடுத்து இம்மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

-பிரியா

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்  ...

5 நிமிட வாசிப்பு

2026 க்கு முன்பே சட்டமன்றத் தேர்தல்: அமமுகவினருக்கு தினகரன் அலர்ட்   

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்: அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா? ...

4 நிமிட வாசிப்பு

எடப்பாடியின் ட்விட்டர் அப்டேட்:  அதிமுகவில் அனைவரும் பதவி இழக்கிறார்களா?

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி! ...

2 நிமிட வாசிப்பு

இதை அன்றே செய்திருக்கலாமே?  அமித் ஷாவுக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

புதன் 2 பிப் 2022