மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 2 பிப் 2022

வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

வாக்குச்சாவடி முகவர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்குச்சாவடி முகவர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வரும் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா தடுப்பு விதிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்தல் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த சூழலில் மத்திய மாநில அரசுகளின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை வாக்குச்சாவடி முகவர்கள் வைத்திருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் தரப்பில் வழங்கப்படும் அடையாள அட்டையில் புகைப்படம் இருக்காது என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வைத்திருந்தால் மட்டுமே வாக்குச்சாவடி முகவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகவர்களின் அடையாளத்தை உறுதி செய்ய இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

புதன் 2 பிப் 2022