மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

பட்ஜெட் 2022: டிஜிட்டல் கரன்சி, வரி குறைப்பு, உயர்வு அறிவிப்பு!

பட்ஜெட் 2022: டிஜிட்டல் கரன்சி, வரி குறைப்பு, உயர்வு அறிவிப்பு!

2022ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.

அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்.

சுலபமான வாழ்க்கை மற்றும் எளிதான வணிகம் புரிதலை ஊக்குவிக்க எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யும் வகையிலான ’ஒரே தேசம் ஒரே பதிவு’ முறை அமல்படுத்தப்படும்

பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரிசர்வ் வங்கி மின்னணு கரன்சியை (மெய்நிகர் ரூபாய்) இந்த நிதியாண்டில் அறிமுகம் செய்கிறது

வரும் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ஒருலட்சம் கோடி ரூபாய் நிதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு வழக்கமான கடன்கள் தவிர்த்து வட்டியில்லா நிதியுதவி வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில், பொதுத்துறை திட்டங்களுக்குப் பசுமை பத்திரங்கள் வெளியிட மத்திய அரசு திட்டம்

வரும் நிதியாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான நிதிப் பற்றாக்குறை 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது

திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை தாக்கல் செய்வோருக்கு 2 ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். மத்திய பட்ஜெட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தனிநபர் வருமான வரி விகிதம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

மாநில அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் செலுத்தப்படும் பங்களிப்பு 10-லிருந்து 14 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது

மெய்நிகர் சொத்துக்கள் பரிமாற்றத்திற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.

புதிய தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகைகள் மார்ச் 2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்திற்காகப் பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பட்ஜெட்டில் 68 % ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டை மேம்படுத்த உதவியுள்ளது.

நடப்பு ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரி வசூல் ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடியாக இருந்தது

மொபைல் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு இறக்குமதி தீர்வையை 7.5 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களுக்கு மாற்று குறைந்தபட்ச வரி 15% ஆக குறைக்கப்படும்.

குடைகள் மீதான வரி 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது, பட்டை தீட்டாத வைரத்தின் மீதான வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

-பிரியா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

செவ்வாய் 1 பிப் 2022