மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 1 பிப் 2022

பெகாசஸ்: ஐடி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

பெகாசஸ்:  ஐடி அமைச்சருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் பெகாசஸ் விவகாரம் புயலைக் கிளப்பியிருக்கிறது.

இஸ்ரேல் நிறுவனத்தின் மென்பொருளான பெகாசஸ் மூலம், இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்பதாகக் கடந்த ஜூலை மாதம் ஊடகங்களில் செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு சிறப்பு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று பல்வேறு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

ஆனால், கடந்த 2021 ஜூலை 22ஆம் தேதி நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் போன் ஒட்டு கேட்பு புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், இஸ்ரேலுடன் 2017ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட 200 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான ராணுவ ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக பெகாசஸை வாங்கியது இந்திய அரசுதான் என்று அமெரிக்க நாளேடான நியூயார்க் டைம்ஸ் தெரிவித்தது.

இந்தச்சூழலில் நேற்று பட்ஜெட் தாக்கல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு எதிராக எதிக்கட்சி எம்.பி.க்கள், ‘நாடாளுமன்றத்துக்கு தவறான தகவலைத் தெரிவித்ததாக’ உரிமை மீறல் நோட்டீஸ் அளித்திருக்கின்றனர்.

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பினோய் விஸ்வம், “அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அரசின் உண்மை முகத்தையும், பெகாசஸ் பற்றிய உண்மைகளையும் மறைக்க முயன்றுள்ளார். அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் உண்மையான தகவலைக் கொடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. கே.சி வேணுகோபால், பெகாசஸ் விவகாரத்தில் அமைச்சர் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்திவிட்டார். பிரதமர் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக உலகின் நம்பகமான நாளிதழ் கூறுகிறது. அதனால் நாங்கள் உரிமை மீறல் நோட்டீஸை அளித்தோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதுபோன்று நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்திய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-பிரியா

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

செவ்வாய் 1 பிப் 2022