அதிமுக கூட்டணி: இன்று இரவு பாஜக முக்கிய முடிவு!

politics

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே நேற்று (ஜனவரி 29) நடந்த நான்கு மணி நேர பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

[பாஜக கேட்ட இடங்களை, கேட்ட எண்ணிக்கையை அதிமுக தர தொடக்கத்திலிருந்தே மறுத்தது. இதுகுறித்து ரிஸ்க் எடுக்க அண்ணாமலை தயார்: அதிமுக தயாரா? என்ற தலைப்பில் மின்னம்பலத்தில் இன்று விரிவான செய்தி வெளியிட்டிருந்தோம்.](https://www.minnambalam.com/politics/2022/01/30/21/bjp-admk-localbody-election-annamal-risk-contest-own)

நமது செய்தியில் குறிப்பிட்டதுபோல பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் இல்லை. தற்கொலை செய்துகொண்ட மாணவி குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவர் அரியலூர் சென்றுவிட்டார். அதனால் அதிமுக பாஜக பேச்சுவார்த்தை இன்று நடக்கவில்லை.

அண்ணாமலை அரியலூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை பதினோரு மணி அளவில் தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளரும் தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷின் நம்பிக்கைக்குரியவருமான நிர்மல்குமார் சுரானா திடீரென கமலாலயத்திற்கு வந்தார்.

அங்கே நிர்வாகிகளுடன் அமர்ந்து பிரதமரின் மன் கி பாத் உரையை பார்த்துவிட்டு.‌.. அதன்பிறகு பிற்பகலில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதே நேரம் பிற்பகலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, உள்ளாட்சி தேர்தல் என்பதால் கட்சியின் பல நிர்வாகிகளும் போட்டியிட விரும்புகிறார்கள். அவர்கள் அனைவருக்குமே வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற நிலையில் அதிமுக, பாஜக இரு கட்சிகளுக்குமே இடப்பங்கீடு கஷ்டமாக உள்ளது.

நாங்கள் எத்தனை சதவீத இடங்கள் கேட்டோம் என்பது பற்றியெல்லாம் அறைக்குள் நடந்ததை வெளியே சொல்ல முடியாது. ஆனாலும் இன்று மாலைக்குள் ஏதோ ஒரு முடிவு எடுத்து விடுவோம்” என்று கூறியிருக்கிறார்.

அதன்பின் திருச்சியில் இருந்தபடியே டெல்லி தலைமை நிர்வாகிகளிடம் ஆலோசித்திருக்கிறார். இன்று இரவு 8 மணிக்கு தமிழக பாஜக தலைவர்களுடன் உரையாடுகிறார் அண்ணாமலை.

அதன் பின்னர் தமிழக பாஜக உள்ளாட்சித் தேர்தல் விஷயத்தில் ஒரு முக்கியமான முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.

**வேந்தன்**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *