மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 29 ஜன 2022

புதிய தலைமை பொருளாதார ஆலோசகருக்கு முதல்வர் வாழ்த்து!

புதிய தலைமை பொருளாதார ஆலோசகருக்கு முதல்வர் வாழ்த்து!

புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அனந்த நாகேஸ்வரனுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த கே.வி.சுப்ரமணியனின் மூன்றாண்டு பதவி காலம் கடந்த டிசம்பர் 6ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இப்பதவிக்கு புதிய நபரை நியமிப்பதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது.

இந்த நிலையில், மத்திய அரசுக்கான புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக தமிழ்நாட்டைச் சேர்ந்த அனந்த நாகேஸ்வரனை மத்திய அரசு நியமித்து உத்தரவிட்டது. நேற்று(ஜனவரி 28) அப்பொறுப்பை அனந்த நாகேஸ்வரன் ஏற்றுக் கொண்டார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த பொறுப்பில் இருப்பார்.

இவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 29) தனது ட்விட்டர் பக்கத்தில்,” நமது நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் தமிழர்களின் புகழ்பெற்ற பட்டியலில் இணைந்துள்ள நிதியமைச்சகத்தின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகரான டாக்டர் வி. அனந்த நாகேஸ்வரனுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

யார் இந்த அனந்த நாகேஸ்வரன்

மதுரையை பிறப்பிடமாகக் கொண்ட அனந்த நாகேஸ்வரன், பள்ளிப் படிப்பை மதுரை டிவிஎஸ் பள்ளிலும், பி.காம் கல்லூரி படிப்பை மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் படித்தார். அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம்மில் எம்பிஏ படித்து முடித்த பின்பு, ஆம்ஹெர்ஸ்டில் உள்ள மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் ஆய்வு மேற்கொண்டு டாக்டர் பட்டமும் பெற்றார்.

உலகப் புகழ்பெற்ற யு.பி.எஸ் கிரெடிட் சூஸ், ஜூலியஸ் பேயர் உள்ளிட்ட தலைமை முதலீட்டு அதிகாரியாகப் பணியாற்றினார். IFMR பட்டதாரி வணிகப் பள்ளியின் முதல்வராகவும், கிரியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 2019 முதல் 2021 வரை பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் பகுதி நேர உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி குல்சார் நடராஜனுடன் இணைந்து ‘இந்தியா வளர முடியுமா?’ ‘நிதியத்தின் எழுச்சி: காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள்’ ஆகிய நூல்களையும், உலக வங்கியின் அப்போதைய இயக்குநரும், தற்போதைய நிதிச் செயலாளருமான டி.வி சோமநாதனுடன் இணைந்து ‘தி எகனாமிக்ஸ் ஆஃப் டெரிவேடிவ்ஸ்’ என்ற நூலையும் எழுதியுள்ளார்.

ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம், கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியத்தைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பொறுப்பேற்கும் நான்காவது தமிழர் அனந்த நாகேஸ்வரன் ஆவார்.

வினிதா

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

3 நிமிட வாசிப்பு

பன்னீர் கடிதம்: எடப்பாடி பழனிசாமி நிராகரிப்பு!

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

5 நிமிட வாசிப்பு

உதவி கேட்ட ஓபிஎஸ்.. மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. ஏன் தெரியுமா?

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்! ...

5 நிமிட வாசிப்பு

இந்த நிலைமைக்கு நீங்கள் தான் காரணம்: பன்னீருக்கு எடப்பாடி கடிதம்!

சனி 29 ஜன 2022