மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 28 ஜன 2022

சூடுபிடிக்கும் பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கு!

சூடுபிடிக்கும் பாலியல் புகார் ஐஜி முருகன் வழக்கு!

பெண் எஸ்பிக்கு முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜி முருகன் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட்டு விட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றிய முருகன், அவருக்குக் கீழ் பணிபுரிந்த பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2018ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக அந்த பெண் எஸ்பி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.

இந்த சூழலில் 2019ஆம் ஆண்டு ஐஜி முருகன் மீதான வழக்கைத் தெலுங்கானாவுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் மாற்றியது. ஆறு மாதங்களில் விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் தெலுங்கானா டிஜிபிக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து முருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ஐஜி முருகன் பாலியல் அத்துமீறல் புகார் வழக்கைச் சென்னை உயர் நீதிமன்றம் தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதனிடையே ஆட்சி மாறியதால் விசாரணையைத் தமிழகத்திலேயே மேற்கொள்ளலாம் எனப் பெண் எஸ்பி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலியல் புகார் வழக்கைத் தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்தது. தமிழகத்தில் விசாரணை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஐஜி முருகன் தரப்பில் வாதங்களை முன்வைக்க 4 வாரம் கால அவகாசம் கேட்கப்பட்டது.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இந்த வழக்கு ஏற்கனவே 3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதால் இனி மேலும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

சிபிசிஐடி சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, விசாகா கமிட்டி விதிகளின்படி துறை ரீதியான பாலியல் புகாரை 90 நாட்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையைத் தொடங்கிவிட்டது. எனவே கால அவகாசம் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை விசாரித்த நீதிபதிகள் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

வெள்ளி 28 ஜன 2022