மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 26 ஜன 2022

2 மாநிலங்களில் கொடியேற்றிய தமிழிசை

2 மாநிலங்களில் கொடியேற்றிய  தமிழிசை

தெலங்கானா ஆளுநராகவும் , புதுச்சேரி துணைநிலை (பொறுப்பு) ஆளுநராகவும் உள்ள தமிழிசை சவுந்தரராஜன் இரு மாநிலங்களிலும் குடியரசு தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றினார்.

வழக்கமாக, சுதந்திர தினத்தன்று முதல்வரும், குடியரசு தின விழாவில் ஆளுநரும் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வர். ஆனால் 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் நிரந்தர ஆளுநர் இல்லை. பொறுப்பு ஆளுநராக வித்யாசாகர் ராவ் இருந்தார். அப்போது அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் தமிழகத்துக்கு வரவில்லை. இதையடுத்து 2017ல் முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் குடியரசு தின கொடி ஏற்றி வைத்தார்.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்துக்கு புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி கொடி ஏற்றுவதாக இருந்த நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நானே வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அந்தவகையில் இன்று காலை தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ராஜ் பவனில் கொடி ஏற்றி உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்தார் தமிழிசை.

பின்னர் புதுச்சேரி கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாராயண சாமி எதிர்ப்பு

புதுச்சேரி, தெலங்கானா என இரண்டு மாநிலங்களிலும் ஆளுநர் தமிழிசை கொடியேற்றுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று; நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதல்வர் ரங்கசாமி வேடிக்கை பார்க்கிறார் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசானது புதுவைக்கு நிரந்தர ஆளுநரை நியமித்திருந்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்காது. இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும். ஆளுநருக்கு மத்திய அரசு அறிவுறுத்தி இருக்க வேண்டும்.மாநில வளர்ச்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டு நிர்வாகத்தை ஆளுநரிடம் கொடுத்துவிட்டு முதல்வர் ரங்கசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு டம்மி அரசாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

புதன் 26 ஜன 2022