மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 24 ஜன 2022

கிராமங்கள் பக்கம் திரும்பும் ஒமிக்ரான்!

கிராமங்கள் பக்கம் திரும்பும் ஒமிக்ரான்!

மெட்ரோ நகரங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வரும் ஒமிக்ரான் அடுத்த சில வாரங்களில் கிராமங்கள் பக்கம் திரும்பும் என்று கேரள கோவிட் பணிக்குழுவிற்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஒமிக்ரான் தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது. பெருநகரங்களில் இது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது என்று இன்சகாக் நேற்று அறிக்கை வெளியிட்டியிருந்தது.

இந்த நிலையில் கேரள கோவிட் பணிக்குழுவிற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவர் ராஜீவ் ஜெயதேவன் கூறுகையில், “பெருநகரங்களில் பரவி வரும் ஒமிக்ரான் தொற்று அடுத்த சில வாரங்களில் கிராமங்கள் மற்றும் சிறிய பகுதிகளில் அதிகமாக பரவும். நாட்டில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்தது முதல், முதலில் மக்கள் நெருக்கம் அதிகமுள்ள பெருநகரங்களிலும், அதற்கடுத்து கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு அலையின்போதும் இந்த போக்கை உலகம் முழுவதும் காண முடிகிறது.

கடந்த இரண்டாவது அலையில் பெரும் பாதிப்புக்கு டெல்டா காரணமாக இருந்தது. தற்போது ஒமிக்ரான் எனும் புதிய திரிபு காரணமாக கொரோனா பாதிப்புகள் அதிகமாகி, மூன்றாம் அலைக்கு எதிராக நாடு போராடி வருகிறது. ஆனால், கடந்த காலங்களை விட தற்போது பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

ஒமிக்ரான் நுரையீரலில் தொற்றுநோயை ஏற்படுத்துவது குறைவு என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒமிக்ரான் மாறுபாடு கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டைப் போன்று கிடையாது. வெளியில் பயணம் மேற்கொள்ளாமல் வீட்டிலேயே இருப்பவர்களுக்கும் ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுகிறது. இருப்பினும், ஒமிக்ரான் பாதித்த மக்கள் விரைவில் குணமடைகின்றனர்” என்று கூறுகின்றனர்.

-வினிதா

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

3 நிமிட வாசிப்பு

டி.ராஜேந்தருக்கு புற்றுநோய்: டாக்டர்கள் அவசர ஆலோசனை!

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

4 நிமிட வாசிப்பு

பி.கே.வுக்கு பதில் சுனில்: தேர்தலுக்கு தயாராகும் காங்கிரஸ்!

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

4 நிமிட வாசிப்பு

எப்படியிருக்கிறார் டி.ராஜேந்தர்?

திங்கள் 24 ஜன 2022