உள்ளாட்சித் தேர்தலுக்கு துணை ராணுவம்: அதிமுக, பாஜக வலியுறுத்தல்!

politics

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தொடர்பாக தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜனவரி 19) சென்னை கோயம்பேட்டிலுள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

திமுக சார்பில் கிரிராஜன், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் சார்பில் தாமோதரன், பாஜக சார்பில் கரு.நாகராஜன் தியாகராஜன் என்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திமுகவின் கிரிராஜன், “தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் ,

கொரோனா விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டடது” என்று கூறினார்.

அதிமுக சார்பில் கலந்துகொண்ட பொள்ளாச்சி ஜெயராமன், “தேர்தல் ஒரேகட்டமாக நடத்தப்படவேண்டும். துணை ராணுவப் படையினரை முழுமையாகப் பயன்படுத்தி அவர்களின் கண்காணிப்பில் தேர்தல் நடக்க வேண்டும். கோவை, சென்னையில் வாக்காளர் பட்டியலில் பல குளறுபடிகள் இருக்கின்றன. இதுகுறித்து ஆதாரங்களுடன் புகார் அளித்திருக்கிறோம்” என்று வலியுறுத்தினார்.

பாஜக சார்பில் பேசிய கரு. நாகராஜன், அனைத்துக் கட்சிகளும் ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினோம்.. தேர்தலுக்கு துணை ராணுவப் படையை வரவழைத்து நேர்மையாக நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் தேதியை முறையான அவகாசத்தோடு அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

**-வேந்தன்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *