மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 19 ஜன 2022

ஆவின்: புதிய பால் பொருட்கள் அறிமுகம்!

ஆவின்:  புதிய பால் பொருட்கள் அறிமுகம்!

ஆவின் நிறுவனம் சார்பில் புதிதாகத் தயாரிக்கப்பட்ட பொருட்களை முதல்வர் ஸ்டாலின் இன்று அறிமுகம் செய்தார்.

ஆவின் என்பது தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சார்பில் தமிழகம் முழுவதும் கால்நடை விவசாயிகளிடம் இருந்து பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பால் மட்டுமின்றி தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் ஆவின் பால், பால்கோவா மற்றும் குல்ஃபிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இவை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் ஆவினில் புதிதாக 5 பொருட்களை அறிமுகம் செய்துவைத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

பிரிமியம் மில்க் ஷேக், மாம்பழம் – ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் டிரிங்க், பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒய்ட்னர் ஆகிய பொருட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பொருட்களும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-பிரியா

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

4 நிமிட வாசிப்பு

வேல்முருகனுக்கு வீசிய வலை: பாஜகவில் இணைந்த முன்னாள் மனைவி!

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

4 நிமிட வாசிப்பு

ரெய்டு நடக்கும் நேரம்: சுட்டிக்காட்டும் ப.சிதம்பரம்

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

5 நிமிட வாசிப்பு

ஹிஜாப்பை கழற்றச் சொன்ன தேர்வு அதிகாரி: நடந்தது என்ன?

புதன் 19 ஜன 2022