மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 18 ஜன 2022

அலங்கார ஊர்திகள் : முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

அலங்கார ஊர்திகள் :  முதல்வருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்!

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியினை பங்கேற்க செய்ய அதிமுக முழு ஆதரவையும் கொடுக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜபாதையில் மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.

5 ஆண்டுகளாக தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் பங்கேற்று வந்த நிலையில் இந்த ஆண்டு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு காரணம் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய அரசு சொன்ன கருத்துரு இல்லாமல், தமிழகம் கொடுத்த கருத்தாக்கத்திற்காக இந்த வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

இதனிடையே பல்வேறு கட்சியினரும் தமிழகத்தின் அலங்கார ஊர்தி ராஜபாதையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

அதுபோன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , “இந்தியாவில் 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 37 இருந்தாலும், பொதுவாக குடியரசு தின விழாவின்போது 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் சார்பாகத்தான் அலங்கார ஊர்திகள் பங்கேற்கும். அதாவது, சாதாரண சூழ்நிலைக்கும், கொரோனா நோய்த் தொற்று இருக்கின்ற சூழ்நிலைக்கும் உள்ள வித்தியாசம் வெறும் நான்குதான். எனவே, தமிழ்நாட்டினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும்.

இதுபோன்று, இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று நோய் காரணத்தைக் காட்டி ஹஜ் புனிதப் பயணத்திற்கு மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் நீக்கப்பட்டது.

பொதுவாக, ஹஜ் பயணிகள் புறப்படுமிடத்தை தேர்வு செய்தல், அலங்கார ஊர்திகளை இடம்பெறச் செய்தல் போன்ற முடிவுகள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் அதற்கான குழுக்கள் மட்டத்தில் எடுக்கக்கூடிய ஒன்று. எனவே, இந்தியாவின் பிரதானமான நான்கு நகரங்களில் சென்னை ஒன்று என்பதையும், இந்தியாவிலுள்ள மிகப் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்று என்பதையும், தமிழ்நாட்டின் கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு ஆகியவற்றை மாநில அரசு அதிகாரிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எடுத்துக்கூறி, அதிகாரிகள் மட்டத்திலேயே அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒருவேளை அதில் ஏதாவது சிரமம் இருந்தால், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் வரிகளை ஐக்கிய நாடுகள் அவையில் எடுத்துரைத்து, இதுதான் தன்னுடைய வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்று கூறி, தமிழ் மொழியின் சிறப்பை ஆங்காங்கே போற்றிவரும் பிரதமரின் கவனத்திற்கு நேரடியாக எடுத்துச் சென்று பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணவேண்டும்.

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழ்நாட்டை சேர்ப்பதைப் பொறுத்த வரை, அதன் அவசரத் தன்மையைக் கருதி முதல்வர், பிரதமருக்கு நேற்று விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தனது முழு ஆதரவினை நல்கும்” என்று தெரிவித்துள்ளார்.

-பிரியா

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த ...

8 நிமிட வாசிப்பு

நான் இணை ஒருங்கிணைப்பாளர்- உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்த எடப்பாடி:  ஏன்?

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

4 நிமிட வாசிப்பு

பன்னீர்செல்வத்தைப் பாராட்டுகிறேன்: டிடிவி தினகரன்

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

3 நிமிட வாசிப்பு

ஆ.ராசாவின் பேச்சால் திமுக பிளவுபடும்: பாஜக ரியாக்‌ஷன்!

செவ்வாய் 18 ஜன 2022