மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 17 ஜன 2022

மோடியைத் தாக்கிய டிவி ஷோ: பாஜக கடிதம்

மோடியைத் தாக்கிய டிவி ஷோ: பாஜக கடிதம்

பொங்கல் திருவிழாவை ஒட்டி தமிழக டிவி சேனல்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. இந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 15 ஆம் தேதியன்று ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் தொடரின் நான்காம் சீசன் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் ஒரு மன்னரும், அமைச்சரும் பேசிக் கொள்வது போல குழந்தைகளால் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அமைச்சு அமைச்சு என்று மன்னர் விளிக்க, பதிலுக்கு அமைச்சர் மன்னரை கலாய்த்து பதிலளிப்பது போல நிகழ்ச்சி அமைந்திருந்தது.

அதில், பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணம், அவரது பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள், பிரதமர் தமிழ்நாட்டுக்குள் வரமுடியாமல் திரும்புவது போன்ற பரபரப்பான அரசியல் நடவடிக்கைகளை காமெடிக்குள் வைத்து பகிரங்கமாக விமர்சித்திருந்தனர். பொழுது போக்கு நிகழ்ச்சியில் அதுவும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கூட இப்படி மோடியை விமரிசித்தது சமூக தளங்களில் வைரலானது.

இதுகுறித்து உடனடியாக ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதும்., அவர் இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் தமிழக பாஜக சார்பில் ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடியை பற்றிய அவதூறுகளை குழந்தைகளிடம் பரப்புவது போல இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சி உடனடியாக இந்த நிகழ்ச்சியை எந்த வடிவத்திலும் ஒளிபரப்பாமல் தடுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கான சேனல் நிர்வாகம், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சியின் நீதிபதிகள் ஆகியோர் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தமிழக பாஜகவின் சமூக ஊடக பிரிவு ஐடி பிரிவின் தலைவர் சி.டி. நிர்மல் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

-வேந்தன்

ஆளுநராக பன்னீர்: பாஜகவின் புது பஞ்சாயத்து!

6 நிமிட வாசிப்பு

ஆளுநராக பன்னீர்:  பாஜகவின் புது பஞ்சாயத்து!

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

4 நிமிட வாசிப்பு

பெஞ்சமின் மீது எடப்பாடி எரிந்துவிழுந்த பின்னணி!

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

3 நிமிட வாசிப்பு

மீண்டும் அரசியலுக்கு வரும் தமிழிசை?

திங்கள் 17 ஜன 2022