மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 16 ஜன 2022

தடுப்பூசி திட்டம் -ஓராண்டு நிறைவு: தமிழக நிலவரம்!

தடுப்பூசி திட்டம் -ஓராண்டு நிறைவு: தமிழக நிலவரம்!

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. இதுவரை 156.76 கோடி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 16ஆம் தேதி சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. பிப்ரவரி 2 முதல் முன்கள பணியாளர்களுக்குப் போடப்பட்டது. மார்ச் 1முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், அதன்பின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தொடர்ந்து கடந்த ஜனவரி 3ஆம் தேதி முதல் 15-18 வயதுடையவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.

அதன்படி இதுவரை கடந்த 24 மணி நேரத்தில் 66 லட்சத்துக்கும் அதிகமான (66,21,395) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கோவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 156.76 கோடியைக் (1,56,76,15,454) கடந்தது. 1,68,19,744 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

92 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸும், 68 சதவிகிதம் பேருக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை முகாம்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதுவரை 18 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. www.mygov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் படி, தமிழகத்தில் 8,98,38,046 டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இதில், 5,14,96,335 பேருக்கு முதல் டோஸும், இவர்களில் 3,64,01,052 பேருக்கு இரண்டாம் டோஸும் போடப்பட்டுள்ளன. 15 -18 வயதினருக்கு 18,62,072 டோஸ்கள் போடப்பட்டுள்ளன.

முன்னெச்சரிக்கை டோஸ் 78,587 பேருக்குப் போடப்பட்டுள்ளன.

-பிரியா

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்! ...

5 நிமிட வாசிப்பு

பாஜக பக்கம் போகலாமா? திமுக எம்.எல்.ஏ. திடீர் ஆலோசனைக் கூட்டம்!

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை? அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் ...

11 நிமிட வாசிப்பு

பட்னவிஸ் ஏன் முதல்வராகவில்லை?  அமித் ஷா ஏவிய அம்பு- மகாராஷ்டிரத்தின் அதிமுகவாகும் சிவசேனா

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

5 நிமிட வாசிப்பு

அதிமுக பொதுக்குழு வழக்கு: பன்னீர் தரப்புக்கு அறிவுறுத்தல்!

ஞாயிறு 16 ஜன 2022