மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

ராஜேந்திரபாலாஜியிடம் பேசாத ஓபிஎஸ் இபிஎஸ்: பின்னணி!

ராஜேந்திரபாலாஜியிடம் பேசாத ஓபிஎஸ் இபிஎஸ்: பின்னணி!

பண மோசடி வழக்கில் தலைமறைவாகி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜனவரி 13 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.

ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஒருவாரம் திருச்சி மத்திய சிறையில் இருந்த ராஜேந்திரபாலாஜியை சிறைக்குள் அதிமுக முக்கியப் புள்ளிகள் யாரும் சென்று சந்திக்கவில்லை. இதில் மனவருத்தத்தில் இருந்த ராஜேந்திரபாலாஜியை சிறைவாசலில் விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் வரவேற்றனர். மிகவும் அமைதியாக வெளியே வந்தவர் நேராக திருச்சியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றார்.

அங்கே ரெஃப்ரெஷ் செய்துவிட்டு அவர் செய்த முதல் வேலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு போன் போட்டதுதான். ஆனால் அவர்கள் இருவரோடும் அப்போது அவரால் பேசமுடியவில்லை.

மீண்டும் இதனால் வருத்தமான ராஜேந்திரபாலாஜி சில மணி நேரங்களில் காரில் விருதுநகருக்குக் கிளம்பினார். சிவகாசி சென்று திருத்தங்கலில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். அப்போது உறவினர்கள் அவரிடம், போலீஸார் விசாரணை என்ற பெயரில் என்னென்ன செய்தார்கள் என்பதை அவரிடம் எடுத்துக் கூறினார்கள். சில அதிமுக நிர்வாகிகளும் அவரை வீடு தேடி வந்து சந்தித்தார்கள்.

வீட்டுக்குச் சென்றபின் மீண்டும் அவர் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை போன் மூலம் தொடர்புகொண்டிருக்கிறார். ஆனால், ’ பேசுறேன்னு சொன்னாரு, அவரே உங்க லயன்ல வர்றாருனு சொன்னாரு’ என்பன போன்ற பதில்கள் ராஜேந்திரபாலாஜிக்கு சொல்லப்பட்டதே தவிர ஒ.பன்னீரும், எடப்பாடியும் அவரிடம் உடனடியாக பேசவில்லை.

ராஜேந்திரபாலாஜி தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ளார். நான்கு வாரகாலம் விருதுநகர் மாவட்டத்தை விட்டு அவர் வெளியே செல்லக் கூடாது. இந்த நிலையில் ஓ.பன்னீரையும், எடப்பாடியையும் நேரில் சந்திக்கவே அவர் விரும்புகிறார். ஆனால் அதற்கு முன் சிறைசென்றுவிட்டு வந்த தன்னிடம் இரு தலைவர்களும் நலம் விசாரிக்கக் கூடவில்லையே என்ற வருத்தம் அவருக்கு இருக்கிறது என்கிறார்கள் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்கள்.

ஆனால், ‘ போலீஸின் கண்காணிப்புக்குள்தான் இருக்கிறார் ராஜேந்திரபாலாஜி. இந்நிலையில் எந்த விஷயத்தையும் போனில் பேசவேண்டாம் என்று தலைவர்கள் நினைத்திருக்கலாம். நேரில் போய் பார்க்கும்போது பேசுவார்” என்றும் அவர்களே இதற்குக் காரணமும் கூறுகிறார்கள்.

-வேந்தன்

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 ஜன 2022