மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

புதிய தொழில்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு : மோடி

புதிய தொழில்கள் தான் இந்தியாவின் முதுகெலும்பு : மோடி

பிரதமர் மோடி பல்வேறு துறைகளைச் சேர்ந்த புதிய தொழில்முனைவோருடன் இன்று (ஜனவரி 15) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

வேர்களிலிருந்து வளர்ச்சி, டிஎன்ஏவை அசைத்தல், உள்ளூரிலிருந்து உலகம் வரை, தொழில்நுட்பத்தின் எதிர்காலம், உற்பத்தித்துறையின் சாம்பியன்களை உருவாக்குதல், நீடித்த வளர்ச்சி என்ற ஆறு மையப்பொருள்கள் குறித்து தொழில்முனைவோர் பிரதமர் முன்னிலையில் விளக்கங்கள் அளித்தனர். மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் , மன்சுக் மாண்டவியா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "நாட்டின் அனைத்து புதிய தொழில்களையும் புதியன கண்டுபிடிக்கும் அனைத்து இளைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். இவர்கள் தான் உலகின் புதிய தொழில்களில் இந்தியாவின் கொடியை ஏற்றுகிறார்கள். இந்த கலாச்சாரம் நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கும் செல்வதற்காக ஜனவரி 16ஆம் தேதியைத் தேசிய புதிய தொழில்கள் தினமாகக் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் அவர், “குழந்தைப் பருவத்திலிருந்தே மாணவர்களிடையே புதிய கண்டுபிடிப்புக்கான ஈர்ப்பை உருவாக்க வேண்டும்.

நமது புதிய தொழில்கள் போட்டியின் விதிகளை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அதனால் புதிய இந்தியாவின் முதுகெலும்பாக புதிய தொழில்கள் இருக்கப்போவதாக நான் நம்புகிறேன். கடந்த ஆண்டு நாட்டில் அதிக முதலீட்டில் 42 புதிய தொழில்கள் வந்துள்ளன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனங்கள் இந்தியாவின் தற்சார்பு , தன்னம்பிக்கையின் அடையாளமாகும்.

இந்த நூற்றாண்டின் அதிக முதலீட்டு புதிய தொழில் நிறுவனங்களைத் தொடங்குவதை நோக்கி இந்தியா இன்று துரிதமாகச் செல்கிறது. இந்தியாவின் புதிய தொழில்களின் பொற்காலம் இப்போது தொடங்கிருப்பதாக நான் நம்புகிறேன். உங்கள் கனவுகளை உள்ளூருக்கு உரியதாக வைத்திருக்காமல் அவற்றை உலகுக்கானதாக மாற்றுங்கள். இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 ஜன 2022