மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

பாலமேடு ஜல்லிக்கட்டு: 3ஆவது ஆண்டாகப் பரிசு பெற்ற வீரர்!

பாலமேடு ஜல்லிக்கட்டு: 3ஆவது ஆண்டாகப் பரிசு பெற்ற வீரர்!

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகப் பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்து பரிசு பெற்றார்.

உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (ஜனவரி 15) நடைபெற்றது. இதில் மொத்தம், 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். காலை 8 மணிக்குப் போட்டி தொடங்கியது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் போட்டியைத் தொடங்கி வைத்தனர்.

மொத்தம் 7 சுற்றுகள் நடைபெற்றது. இதில், 21 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார் மதுரை மாவட்டம் பொதும்பைக் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன். ஓட்டுநரான இவர் கடந்த 2020, 2021 மற்றும் 2022 என தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடம் பிடித்தார். இவருக்கு இந்த ஆண்டு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது.

அதுபோன்று 11 காளைகளை அடக்கி, இரண்டாம் இடம் பிடித்த கார்த்திக் ராஜா என்பவருக்கு டிவி பரிசாக வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் புலியூரைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. அதுபோன்று மேலமடை பிரகாஷ் என்பவரது மாட்டுக்கு இரண்டாவது பரிசாக பசுமாடு வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு போட்டிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலிடம் பிடித்த பிரபாகரன், “மூன்றாம் ஆண்டாக முதல் பரிசு பெற்றதில் மகிழ்ச்சி. இந்த முறை போட்டி கடுமையாகத்தான் இருந்தது. ஏனென்றால் கடந்த முறை அவனியாபுரத்தில் பங்கேற்ற மாடுகளையும் பாலமேட்டில் பங்கேற்க வைப்பார்கள். அதனால் அந்த மாடுகள் சோர்வாக இருக்கும், அதனை அடக்குவது எளிது. ஆனால் இந்த முறை ஆன்லைன் மூலம் பதிவு செய்து மாடுகளைப் பிரித்துவிட்டார்கள் என்பதால் போட்டி கடுமையாகவே இருந்தது. ஜல்லிக்கட்டு போட்டியில் முதல் இடம் பிடிப்பவர்களுக்கு அரசுவேலை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 36 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 ஜன 2022