மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!

5 மாநில தேர்தல்: தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!

5 மாநில தேர்தலுக்கான கட்டுப்பாடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம் முடிவடைகிறது. இதனால் தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு தேர்தலைத் தள்ளி வைக்கலாம் என்று அலகாபாத் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

ஆனால் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பிப்ரவரி 10ஆம் தேதி முதல் மார்ச்7 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறவுள்ளது. உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகப் பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக மணிப்பூரிலும், பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், கடந்த 8ஆம் தேதி முதல் ரோடுஷோ மற்றும் பொதுக் கூட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தடை இன்றுடன் முடிவடையும் நிலையில், தேர்தல் ஆணையம் மீண்டும் 5 மாநில தேர்தல் தொடர்பாக இன்று ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், பேரணிகள் மற்றும் ரோட்ஷோக்களுக்கான தடை ஜனவரி 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுபோன்று உள்ளரங்கு கூட்டம் நடத்தினால் 300 நபர்களுக்கு மிகாமலும் அல்லது அரங்கின் அளவுக்கு ஏற்ப 50 சதவிகித பேர் மட்டும்தான் இடம் பெற வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அதுபோன்று கோவிட் தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் அரசியல் கட்சிகள் கடைப்பிடிப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.

-பிரியா

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

10 நிமிட வாசிப்பு

நயினார் நாகேந்திரன் பேச்சு: ஓபிஎஸ் அறிக்கை!

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் ...

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: ஐஏஎஸ்-ஐபிஎஸ் அதிகாரிகள் சட்டம்: பாஜகவின் தேர்தல் திட்டம்!

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

10 நிமிட வாசிப்பு

அதிமுக-பாஜக:என்ன நடக்கிறது?

சனி 15 ஜன 2022