மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 15 ஜன 2022

களைக் கட்டிய மது விற்பனை: எவ்வளவு வசூலானது?

களைக் கட்டிய மது விற்பனை: எவ்வளவு வசூலானது?

மதுக்கடைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை என்பதால் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலை மோதியது. இதன்காரணமாக ரூ.675கோடிக்கும் மேல் விற்பனை நடைபெற்றுள்ளது.

இன்று திருவள்ளுவர் தினம், நாளை முழு ஊரடங்கு. இதன் காரணமாக இன்றும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் , கடந்த மூன்று தினங்களாகவே மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கி வைத்துக்கொண்டனர். இதன் காரணமாக டாஸ்மாக் கடைகளில் கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் அலை மோதியதைக் காண முடிந்தது.

இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில், கடந்த 3 நாட்களில் ரூ.675 கோடிக்கும் மேல் மது விற்பனையாகி உள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி 12 மற்றும் 13 தேதிகளில் மட்டும் மொத்தம் ரூ. 358.11 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 12ஆம் தேதி அன்று 155.06 கோடிக்கும், 13ம் தேதி அன்று 203.05 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதுபோன்று நேற்று ஒரே நாளில் ரூ.317 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் ரூ.59.28 கோடி, திருச்சி மண்டலத்தில் 65.52 கோடி, சேலம் மண்டலத்தில் ரூ.63.87 கோடி, மதுரை மண்டலத்தில் ரூ.68.76 கோடி, கோவை மண்டலத்தில் 59.65 கோடி என மொத்தம் ரூ.317.08 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.

அதன்படி கடந்த மூன்று தினங்களில், ஏறத்தாழ ரூ.675 கோடிக்கும் மேல் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 13, 14 மற்றும் 16 ஆகிய மூன்று தேதிகளில் தமிழகத்தில் மொத்தம் 589 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

6 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய்

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

6 நிமிட வாசிப்பு

பொறியாளரை தாக்கிய திமுக எம்எல்ஏ: கட்சிப் பதவி பறிப்பு!

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன் திடீர் முடிவு! ...

8 நிமிட வாசிப்பு

டிஜிட்டல் திண்ணை: சசிகலாவுக்கு எதிராக தினகரன்  திடீர் முடிவு!

சனி 15 ஜன 2022