அமைச்சர்களுக்கு அனுமதி: அன்பில் மகேஷூக்கு விதிவிலக்கு!

politics

கொரோனா அலை பரவிக் கொண்டிருக்கும் சூழலில், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் பொங்கல் நன்னாளில் நேரில் வந்து சந்திப்பதை முற்றிலுமாக, கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

உலக புத்தாண்டு நாளில் இதே வேண்டுகோளை, இதே காரணத்திற்காக விடுத்தேன். அதனை ஏற்றுக் கடைபிடித்த உடன்பிறப்புகளின் கட்டுப்பாட்டு உணர்வு கண்டு மெய்சிலிர்த்தேன். தமிழர் திருநாளில் அதனை கடைபிடித்து, கட்டுப்பாடு காத்து, கொரோனா பரவலை தடுப்பதற்கு உறுதியுடன் துணை நிற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

தமிழர் திருநாளான இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்றைய நாளில் திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் தன்னை நேரில் சந்திக்க வர வேண்டாம் என்று கட்டளை இட்டிருந்த முதல்வர், அமைச்சர்களுக்கு மட்டும் அனுமதி அளித்திருந்தார். அதன்படி அமைச்சர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால், அமைச்சர்கள் யாருடனும் போட்டோ, வீடியோ எடுப்பதை முதல்வர் தவிர்த்துவிட்டார்.

இந்த நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தனது குடும்பத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்று பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கலைஞர் முதல்வராக இருந்தபோது, திமுக தொண்டர்கள் அனைவரும் நேரில் வந்து வாழ்த்துக் கூறி தலைவரிடம் இருந்து பத்து ரூபாய் நோட்டுகளை வாங்கி செல்வார்கள். தற்போது மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் பொங்கல் பண்டிகை என்பதால் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் என அனைவரும் திமுக தலைவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், முதல்வரின் அன்பு கட்டளையால், அது நிறைவேறாத ஆசையாக மாறிவிட்டது.

**வணங்காமுடி**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *